சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 8) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு பவுன் ரூ.53,280க்கு விற்பனையாகிறது. மீண்டும் ஒரு புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டிருக்கிறது.
சர்வதேச பொருளாதார நில வரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று (ஏப்ரல் 8) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு பவுன் ரூ.53,280க்கு விற்பனையாகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பவுன் ரூ.48 ஆயிரம், கடந்த மார்ச் 9-ம் தேதி ரூ.49 ஆயிரம், மார்ச் 28-ம் தேதி ரூ.50 ஆயிரம், அடுத்த நாளான 29-ம் தேதி ரூ.51 ஆயிரம், ஏப்ரல் 4-ம் தேதி ரூ.52 ஆயிரம் என தொடர்ந்து அதிகரித்து, புதிய உச்சங்களை தொட்டது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.6,660-க்கும், ஒரு பவுன் ரூ.53,280-க்கும் விற்கப்படுகிறது. தங்கம் ஒரு கிராம் ரூ.6,660-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.88க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த 6 வாரங்களில் சவரனுக்கு ரூ.6500 அதிகரித்துள்ளது. இவ்வாறாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்தை தாண்டி இருப்பது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours