புதுடெல்லி: கடந்த 2023-24-ம் நிதியாண்டில் சீனாவிலிருந்து ரூ.6127 கோடிக்கு யூரியா இறக்குமதி செய்யப்பட்ட தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான இணை அமைச்சர் அனுபிரியா படேல் மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதில்:
கடந்த நிதியாண்டில் சீனாவிலி ருந்து மட்டும் 18.6 லட்சம் டன் அளவிலான யூரியாவை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 730 மில்லியன் டாலர் (ரூ.6,127 கோடி) ஆகும்.
பாஸ்பேடிக், பொட்டாசிக்: மேலும், 22.6 லட்சம் டன் பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் (பி அண்ட் கே) உரங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. உற்பத்திக்கும், மதிப்பிடப்பட்ட தேவைக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்காக யூரியாவை (விவசாய நோக்கம்) இந்தியா ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.
அந்த வகையில், கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த அளவில் பல்வேறு நாடுகளிலிருந்து 70.4 லட்சம் டன் யூரியாவை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதன் மதிப்பு, 2.6 பில்லியன் டாலர் அதாவது ரூ.21,827 கோடி. அதேபோன்று, 106.5 லட்சம் டன் பி அண்ட் கே உரங்கள் கடந்த நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த வகை உரங்கள் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்தின் (என்பிஎஸ்) திறந்த பொது உரிமத்தின் (ஓஜிஎல்) கீழ் உள்ளன. எனவே, அவை வணிக ரீதியாக சாத்தியமான விதிமுறைகளின் அடிப்படையில் நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்படுகின்றன.
உர ஆலைகள் மறுசீரமைப்பு: யூரியா உற்பத்தியில் தன்னிறைவு அடைய ராம குண்டம் (தெலங்கானா), கோரக்பூர் (உ.பி.),சிந்திரி (ஜார்க்கண்ட்), தல்சேர் (ஒடிசா) உர ஆலைகளின் மறுசீரமைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆண்டுக்கு 12.7 லட்சம் டன் அம்மோனியா-யூரியாவை உற்பத்தி செய்யும் திறனுள்ள புதிய ஆலைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours