பங்குச்சந்தை குறித்து அதிகரித்து வரும் விழிப்புணர்வு காரணமாக முதலீட்டு விகிதம் உயர்ந்துள்ளது. பங்குச்சந்தையில் முதலீட்டு அதிகரிப்பது மட்டும் இல்லாமல் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மீதான முதலீடுகளும் அதிகரித்துள்ளது.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் சொத்து மதிப்பு பகுப்பாய்வு செய்து, மார்ச் மாதத்தில் 8 திட்டங்கள் ரூ. 1,000 கோடிக்கும் அதிகமான வரவுகளைப் பெற்றுள்ளன.
இந்த 8 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் லார்ஜ் கேப், ஃப்ளெக்ஸி கேப், ஃபோகஸ்டு ஃபண்ட், கான்ட்ரா ஃபண்ட் மற்றும் இஎல்எஸ்எஸ் ஃபண்ட் வகைகளைச் சேர்ந்தவை.
இதில், ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் புளூசிப் ஃபண்ட் மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக ரூ. 1,951.05 கோடியை ஈட்டி உள்ளது. இந்தத் திட்டம் பிப்ரவரியில் ரூ.51,554.28 கோடியிலிருந்து மார்ச் மாதத்தில் ரூ.53,505.33 கோடியை நிர்வகித்து வருகிறது.
பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிர்வகிக்கப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில் ஃப்ளெக்ஸி கேப் பிரிவில் உள்ள மிகப்பெரிய திட்டமானது. மார்ச் மாதத்தில் ரூ.1,658.92 கோடி வரவுகளைப் பெற்றுள்ளது. மொத்த ஏயூஎம் ரூ.60,559 கோடியாக உள்ளது. இந்தத் திட்டம் பிப்ரவரியில் ரூ.58,900 கோடி சொத்துமதிப்பு ஆக இருந்தது.
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட் மற்றும் எஸ்பிஐ புளூசிப் ஃபண்ட் மார்ச் மாதத்தில் முறையே ரூ.1,611.62 கோடி மற்றும் ரூ.22,766.78 கோடி வருமானத்தைப் பெற்றன. இந்தத் திட்டம் முறையே ரூ.24,378.39 கோடி மற்றும் ரூ.44,819.48 கோடி சொத்துக்களை நிர்வகிக்கிறது.
எஸ்பிஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்ட் மார்ச் மாதத்தில் முறையே ரூ.1,454.36 கோடி மற்றும் ரூ.1,451.94 கோடி வருமானத்தைப் பெற்றன. இந்தத் திட்டங்கள் முறையே ரூ.32,190.38 கோடி மற்றும் ரூ.26,776.87 கோடி சொத்துக்களை நிர்வகிக்கின்றன.
+ There are no comments
Add yours