விமான டிக்கெட்டின் ஆதார விலையுடன் இணைக்கப்பட்ட சேவைகளை பயணிகளின் தேவைக்கேற்ப சேர்க்கவோ, நீக்கவோ வழிவகை செய்து கொள்ளுமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.
இதன்மூலம் பயணிகள் தங்களுக்கு தேவையான சேவைகளை மட்டும் தேர்ந்தெடுத்து பயணிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால், விமான கட்டணங்கள் தற்போது இருக்கக் கூடிய கட்டணங்களை காட்டிலும் சற்று குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
தற்போது, பயணி ஒருவர் தனக்கு தேவையான சேவைகளை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை மட்டுமே செலுத்தி கொள்ளும் வகையில் வழிவகை செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் கூறியுள்ளது.
உதாரணமாக, சென்னையில் இருந்து கோவைக்கு விமானக் கட்டணம் 3 ஆயிரத்து 770 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அவற்றில், உணவு, இருக்கை தேர்வு, பயணிகளின் உடமைகள் உள்ளிட்டவை அடங்கும்.
இவற்றில், இருக்கையின் தேர்வுக்கு 500 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம்.
தற்போது, இருக்கைத் தேர்வு தனக்கு தேவையில்லை என்று பயணி ஒருவர் விரும்பினால், அவருடைய டிக்கெட் விலையில் இருந்து 500 ரூபாய் சேவை கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது.
+ There are no comments
Add yours