உங்களுடைய பி.எஃப் கணக்கில் எவ்வளவு தொகை இருப்பு இருக்கிறது என்று தெரியுமா? எப்படி தெரிந்து கொள்வது என்று பார்க்கலாம் வாங்க. இனி தங்கள் கணக்கில் உள்ள இருப்பைச் சரிபார்க்க எங்கும் செல்ல வேண்டியதில்லை. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, EPFO ஆன்லைன் சேவை மூலம் PF இருப்பை வீட்டிலேயே எளிதாகச் சரிபார்க்கும் வகையில் சேவை வழங்கியுள்ளது.
தொலைபேசி எண் மூலமாக:
இப்போது, உங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படுகிறதா இல்லையா என்பதை தற்போது நீங்கள் சரிபார்க்கலாம். 011-22901406 என்ற எண்ணிற்கு பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து ஒரு மிஸ் கால் கொடுக்க வேண்டும். இதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. ஒருவர் இந்த சேவையை EPFO போர்ட்டலில் UAN மற்றும் UAN இன் வங்கி கணக்கு எண் உட்பட மற்ற விவரங்களை இணைத்திருக்க வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலமாக:
முதலாவதாக உங்கள் மொபைல் எண்ணிலிருந்து EPFOHO UAN ENG என டைப் செய்து 7738299899 க்கு SMS அனுப்ப வேண்டும். இதில் இறுதியில் உள்ள 3 எழுத்துகள் மொழியை குறிக்கின்றன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ENG ஆங்கிலத்தை குறிக்கிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ், மராத்தி, பெங்காலி, கன்னடம், பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம் மற்றும் குஜராத்தி என மொத்தம் 10 மொழிகளில் இருந்து ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
அடுத்து ஹிந்திக்கு, நீங்கள் HIN, பஞ்சாபிக்கு PUN, குஜராத்திக்கு GUJ, மராத்திக்கு MAR, கன்னடத்திற்கு KAN, தெலுங்கிற்கு TEL, தமிழுக்கு TAM, மலையாளத்திற்கு MAL மற்றும் பெங்காலிக்கு BEN என அனுப்ப வேண்டும்.
ஆப் மூலமாக:
முதலாவதாக Play Store/App Store இலிருந்து Umang பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் உமாங் பயன்பாட்டைத் திறந்து உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு கீழே உள்ள ‘அனைத்து சேவைகள்’ விருப்பத்தை கிளிக் செய்யவும். விருப்பங்களின் பட்டியலிலிருந்து ‘EPFO’ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் உங்கள் EPF இருப்பைச் சரிபார்க்க ‘View Passbook’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்கள் UAN ஐ உள்ளிட்டு Get OTP என்பதைக் கிளிக் செய்யவும். OTP ஐ உள்ளிட்டு ‘உள்நுழை’ என்பதைக் கிளிக் செய்த பின்னர் உங்கள் மொபைல் திரையில் தோன்றும் அடுத்தடுத்த செயல்முறைகளை பின்பற்ற வேண்டும். அதன் பிறகு, உங்கள் EPF இருப்புடன் உங்கள் பாஸ்புக் திரையில் தோன்றும் EPFO போர்ட்டலில் இருந்து உங்கள் PF இருப்பை சரிபார்க்கவும்.
UAN எண் இல்லாமல் PF இருப்பை அறிவது எப்படி :
முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.epfindia.gov.in/ என்ற இணையதளத்திற்கும் சென்று உங்கள் PF இருப்பை தெரிந்துகொள்ளலாம்.
+ There are no comments
Add yours