மகுவேனி ஆளுநருடன் டாக்டர் ராஜேந்திரன் ஆனைமுத்து சந்திப்பு

Spread the love

இயற்கை மருந்து பொருட்களின் சந்தைப்படுத்தல் தொடர்பாக, கென்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் டாக்டர் ராஜேந்திரன் ஆனைமுத்து மகுவேனி கவுண்டியின் ஆளுநருடன் கலந்துரையாடினார். அந்த அனுபவத்தை பற்றி அவர் கூறியதாவது..

Mutula Kilonzo Junior, CBS, Makueni கவுண்டியின் ஆளுநருடன் கலந்துரையாடலில் ஈடுபடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. முன்னதாக 2013 முதல் 2022 வரை மகுவேனி கவுண்டிக்கான செனட்டராக பணியாற்றிய அவர், சிறுபான்மை விப் மற்றும் தகவல் தொடர்புக்கான செனட் குழுவின் துணைத் தலைவராக முக்கியப் பொறுப்புகளை வகித்தார். எங்கள் சந்திப்பின் போது, எங்களது குழுவானது *மகுவேனியின் வர்த்தகம், தொழில்துறை, சந்தைப்படுத்தல், சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறையின் மூலோபாய முன்முயற்சிகளை எடுத்துரைத்தது. எங்களின் உரையாடல், **கென்யா விஷன் 2030 உடன் இணைந்து, உள்ளூர் பொருளாதார வளர்ச்சி, கலாச்சார பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதை பற்றியதாக இருந்தது.

மகுவேனி பகுதிகளில் ‘இயற்கை தயாரிப்புகள் முன்முயற்சி’ மற்றும் கென்யாவின் தேசிய அருங்காட்சியகத்துடன் கூட்டாண்மை.. போன்ற விஷயங்களில் மக்களுடைய ஒத்துழைப்பு குறித்து நாங்கள் ஆராய்ந்தோம். அந்த பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை மேம்படுத்துவதில். மகுவேனி மக்களுக்கான இந்த சந்திப்பு, நேர்மறையான விளைவுகளை தரும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.

இவ்வாறு பேராசிரியர் டாக்டர் ராஜேந்திரன் ஆனைமுத்து அவர்கள் தமது சந்திப்பின் முக்கியத்துவத்தையும், அதன் அனுபவத்தை பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours