தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ராஜேந்திரன் ஆனைமுத்து, இயற்கை பொருட்களின் தொழில் வாய்ப்பு திட்டங்களை ஆய்வு செய்வதற்காக கென்யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கென்யாவின் தேசிய அருங்காட்சியகங்களின் இயக்குநர் ஜெனரல் பேராசிரியை மேரி கிகுங்கு, தேசிய ஒருங்கிணைப்பாளர் இயற்கைப் மருந்து பொருட்கள் தொழில்துறை டாக்டர் தாராசா என். எவன்ஸ் மற்றும் டாக்டர் ஹசன் அகமது ஆகியோரை, பேராசிரியர் ராஜேந்திரன் ஆனைமுத்து நேரில் சந்தித்து கலந்துரையாடினார். கென்ய தேசிய அருங்காட்சியகத்தில் நடந்த இந்த சந்திப்பில் ,பேராசிரியர் டாக்டர் ஆனைமுத்துவிற்கு விருந்தளித்து இயக்குநர் ஜெனரல் கிகுங்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், மதிப்புமிக்க தகவல்களையும் தயாரிப்புகளையும் பயனர்களுக்குப் பரப்புவதற்கும், பேராசிரியர் ஆனைமுத்துவின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர். மேலும் இயக்குநர் ஜெனரல் பேசும்போது, ‘இந்த நிறுவனம் பல்வேறு ஆராய்ச்சித் துறைகளில் பல நிபுணர்களைக் கொண்டுள்ளது. இயற்கை மருந்து பொருட்களின் தொழில் திட்டமானது குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டிருப்பதாகவும், உள்நாட்டு அறிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய சொத்துக்கள் சந்தைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார்.
+ There are no comments
Add yours