நான்கு சக்கர மின்சார சரக்கு வாகனங்களை களமிறக்கிய யூலர் மோட்டார்ஸ்

Spread the love

யூலர் மோட்டார் நிறுவனம் மூன்று சக்கர மின்சார வாகன விற்பனையில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து நான்கு சக்கர மின்சார வாகன விற்பனையில் கால் பதித்து உள்ளது. Storm EV மற்றும் Storm EV LR ஆகிய 2 மின்சார நான்கு சக்கர வாகன மாடல்களை 25-ந் தேதி அது அறிமுகப்படுத்தியது. யூலர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சவுரவ் குமார் இதனை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.

இந்த நான்கு சக்கர லோடு வாகனங்களில் முன்பக்க கேபின்கள் ஏ.சி. வசதி பெற்றவை. உட்புறத்தில் MapmyIndia மற்றும் WhatsApp உடன் ஒருங்கிணைக்கப்பட்ட 10.2-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை உள்பட பல மேம்பட்ட அம்சங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. பயணத்தின் போது பொழுதுபோக்கை அனுபவிக்க ஒரு நாளைக்கு 1 ஜிபி இணைய டேட்டாவை நிறுவனமே இலவசமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் பவர் ஸ்டியரிங், டிஜிட்டல் லாக், வார்னிங் அலாரம் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

வாகன பேட்டரியைப் பொறுத்தவரை 6.6 கிலோவாட் ஆன்போர்டு சார்ஜர் இதில் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் முழுமையாக சார்ஜிங் செய்வதன் மூலம் 300 கி.மீ. பயணிக்க முடியும். வெறும் 15 நிமிடங்கள் சார்ஜிங் செய்தால் 100 கி.மீ. தூரம் வரை செல்லலாம் என தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். சரக்கு வாகனங்கள் கையாள்கிறவர்களுக்கு யூலரின் இந்த மின்சார வாகனங்கள் பெரிதும் பலன் அளிக்கும் என நம்பிக்கை அளித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours