சென்னையில் இன்றைய காலை நேர விலை நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூபாய் 10 அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 80 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்களாக மாற்றம் ஏற்படுகிறது. ஒரு நாள் ஏறுவதும், ஒருநாள் இறங்குவதுமாக உள்ளது தங்கம் விலை.
விலை குறையும் போது இருப்பதை விட, தங்கத்தின் விலை அதிகரிக்கும் போது ராக்கெட் வேகத்தில் அதிகளவில் ஏறுவதுமாக இருப்பதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
கடந்த திங்கள் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.56,720-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாளே சவரனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,120க்கு விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.
+ There are no comments
Add yours