இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிரடியாக அதிகரித்தது. ஆனால், வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது. இருப்பினும், மறுநாள் செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் அதிரடியாக சவரனுக்கு ரூ.680 அதிகரித்தது. இதேபோல், நேற்று வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.48,320-க்கும், கிராமுக்கு ரூ. 25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்து, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் சாமானிய மக்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.48,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 50 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,090-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,644-க்கும், ஒரு சவரன் 53,152-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
+ There are no comments
Add yours