லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியில் கடன் பெறுவது எப்படி?

Spread the love

ஒருவருடைய லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியை அடமானமாக வைத்து கடன் வாங்குவதற்கு உங்களுடைய பாலிசிக்கு பண மதிப்பு இருக்க வேண்டும். இது பெரும்பாலும் நிரந்தர லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளில் காணப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் உதவாது. உங்களுடைய லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிக்கு பண மதிப்பு இருந்தால் மட்டுமே அதனை உங்கள் லோனுக்கான அடமானமாக காட்ட முடியும்.

ஒரு சில லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனிகள் உங்களை ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு அனுமதிக்கின்றன. அதே நேரத்தில் சில நிறுவனங்கள் நீங்கள் நேரடியாக வந்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து செயல்முறை பற்றி போதிய தகவல் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உடனடியாக உங்களது இன்சூரரை அணுகுங்கள். இதனை நீங்கள் போன் மூலமாக கூட செய்யலாம். பாலிசி இன்சூரருக்கு நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழக்கமாக 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையிலான ஒப்படைப்பு மதிப்பை வழங்குகின்றன. LIC 10% வட்டி விகிதத்தை வசூல் செய்கிறது.

இதனை ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் செலுத்த வேண்டும். பாலிசியை துவங்கியதில் இருந்து குறைந்தபட்சம் 3 வருடங்களுக்கு பிரீமியம் தொகையை செலுத்திய பிறகு உங்களுடைய பாலிசிக்கு சரண்டர் மதிப்பு இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும். லோன் தொகையானது சரண்டர் மதிப்பு அடிப்படையில் அமையும்.

வழக்கமாக இது சரண்டர் மதிப்பில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. மேலே இருக்கும் அனைத்து விஷயங்களையும் செய்த பிறகு உங்களுடைய விண்ணப்ப படிவத்தை நிரப்பி அசல் பாலிசி ஆவணங்கள், கேன்சல் செய்யப்பட்ட செக் மற்றும் லோன் தொகைக்கான பேமெண்ட் ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்கவும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours