நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மோசடி செய்திகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவில், தனது வாடிக்கையாளர்களுக்கு மோசடி பற்றிய விவரங்களைப் பகிர்ந்துள்ளனர்.
ஒவ்வொரு புள்ளியும் 25 பைசா மதிப்புடன், அதன் வங்கிச் சேனல்கள் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி புள்ளிகளை எஸ்பிஐ வழங்குகிறது. பல யூசர்கள் இந்த புள்ளிகளை மீட்டெடுக்காமல் பல மாதங்களில் குவித்து வருவது, ஹேக்கர்கள் குறிவைக்க வழிவகுக்கிறது. இந்த எஸ்பிஐ ரிவார்டு பாயிண்டுகளை மீட்பதற்காக மோசடி செய்பவர்கள் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் ஏபிகே மற்றும் மெசேஜ்களை அனுப்புகிறார்கள்.
எஸ்பிஐ வங்கி ஒருபோதும் மின்னஞ்சல்/ அழைப்பு/ இணைப்புகள் அல்லது கோரப்படாத APKகளை எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்புவதில்லை என்றும் தெளிவுப்படுத்துகிறது. எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், எந்த விண்ணப்பங்களையும், கோப்புகளையும் டவுன்லோடு செய்ய வேண்டாம், பாதுகாப்பாக இருங்கள் என்றும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு லாட்டரி திட்டம் அல்லது அதிர்ஷ்டக் குலுக்கல் எதையும் நடத்தவில்லை அல்லது ஏற்பாடு செய்யவில்லை என்று தெளிவாகத் தெரிவிக்கிறது. மேலும் வங்கியால் பரிசு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. குற்றவாளிகள் இந்த போலி சலுகைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை சிக்க வைத்து பணத்தை ஏமாற்றி வருவதாக எச்சரிக்கிறது. வாட்ஸ்அப்பில் இந்த போலி அழைப்பாளர்கள் அல்லது ஃபார்வேர்டு செய்திகளை நம்ப வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உங்கள் ரிவார்டு புள்ளிகளைப் பாதுகாப்பாகப் பெறுவது எப்படி:
SBI FAQ பக்கத்தின்படி, வாடிக்கையாளர்கள் SBI Rewardz திட்டத்தில் தானாகவே பதிவு செய்யப்படுவார்கள். உங்கள் SBI புள்ளிகளை https://www.rewardz.sbi/ இல் ரிடீம் செய்ய. நீங்கள் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். அதை செய்யம் முறை,
1: https://www.rewardz.sbi/ ஐப் பார்வையிடவும் மற்றும் உங்கள் SBI ரிவார்டு புள்ளிகளைப் பெற “புதிய பயனர்” விருப்பத்தைக் கிளிக் செய்யவும்;
2: உங்கள் SBI Rewardz வாடிக்கையாளர் ஐடியை உள்ளிடவும்
3: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிடவும்
4. உங்கள் தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்த்து, ரிடீம் செய்யத் தொடங்குங்கள்
இந்த ரிவார்டு பாயிண்டுகள், பொருட்கள், திரைப்பட டிக்கெட்டுகள், மொபைல்/டிடிஎச் ரீசார்ஜ், விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவு மற்றும் பல தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ரிடீம் செய்ய பயன்படுத்தப்படலாம்.
+ There are no comments
Add yours