இன்றைய பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமானதை தொடர்ந்து ஒரே வாரத்தில் ரூ.14 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளனர். அதேசமயம் நாளை பங்குச் சந்தை திறப்பு குறித்தும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த வாரக் கடைசியில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஸ்மார்ட்டாக வர்த்தகத்தை முடித்து இரண்டும் 2% மேல் உயர்வுடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளன. சென்ற வாரம் மக்களவைத் தேர்தல் காரணமாக கடும் வீழ்ச்சியை பதிவு செய்ததது. அந்த இழப்பை இந்த வாரம் ஈடு செய்துள்ளது.
இன்றைய நாளின் முடிவில் சென்செக்ஸ் 253 புள்ளிகள் (0.34 சதவீதம்) உயர்ந்து 73,917 ஆகவும், நிஃப்டி 50 62 புள்ளிகள் (0.28 சதவீதம்) அதிகரித்து 22,466 ஆகவும் முடிந்தது. மிட் மற்றும் ஸ்மால் கேப் பிரிவுகள் வலுவான வாங்கும் ஆர்வத்தைக் கண்டுள்ளன.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடு முறையே 1.18 சதவீதம் மற்றும் 1.39 சதவீதம் உயர்ந்தது. வெள்ளிக்கிழமை அமர்வின் போது மிட்கேப் குறியீடு 42,873.60 என்ற புள்ளிகளை பெற்று புதிய சாதனையை எட்டியுள்ளது. இந்த வாரம் சென்செக்ஸ் 1.7 சதவீதமும், நிஃப்டி 50 1.9 சதவீதமும் உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours