மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை மீண்டு புதிய உச்சத்துடன் நிறைவடைந்தன. வாகனம், எஃம்எம்சிஜி பங்குகளின் உயர்வு மற்றும் வெளிநாட்டு நிதி வரவு பங்குச்சந்தை உச்சத்துக்கு வழிவகுத்தன.
சென்செக்ஸ் 391.26 புள்ளிகள் உயர்ந்து 80,351.64 என புதிய உச்சத்துடன் நிறைவடைந்தது. வர்த்தக நேரத்தின்போது சென்செக்ஸ் 436.79 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத அளவில் 80,397.17 என்ற உச்சம் அடைந்திருந்தது. அதேபோல், நிஃப்டி 112.65 புள்ளிகள் உயர்ந்து 24,433.20 என்ற புதிய உச்சத்துடன் நிறைவடைந்தது. வர்த்தக நேரத்தின் போது, 123.05 புள்ளிகள் உயர்வடைந்து 24,443.60 என்று உச்சம் பெற்றிருந்ததது.
சென்செக்ஸை பொறுத்தவரை, மாருதி சுசூகி இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு உகந்த முன்முயற்சியாக, அதன் ஹைப்ரிட் கார்களுக்கு உத்தரப் பிரதேச அரசு பதிவு வரியை தள்ளுபடி செய்வதாக வெளியான செய்தியினைத் தொடர்ந்து மாருதி சுசூகி பங்குகள் 6 சதவீதம் உச்சம் பெற்றன. அதேபோல், மகேந்திரா அண்ட் மகேந்திரா, டைட்டன், சன் பார்மா, ஐடிசி, நெஸ்லே மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஜெஎல்டபில்யூ பங்குகள் சரிவடைந்திருந்தன.
ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்த வரை, சியோல் மற்றும் டோக்கியோ பங்குச்சந்தைகள் உச்சத்தில் நிறைவடைந்தன. ஹாங்காங் பங்குச்சந்தை சரிவடைந்திருந்தது. ஐரோப்பிய பங்குச்சந்தைகள் பெரும்பாலும் சரிவில் நிறைவடைந்திருந்தன. திங்கள்கிழமை அமெரிக்க பங்குச்சந்தை உயர்வில் முடிவடைந்திருந்தது. முன்னதாக, திங்கள்கிழமை சென்செக்ஸ் 36.22 புள்ளிகள் சரிந்து 79,960.38 ஆக நிறைவடைந்தது. நிஃப்டி 3.30 புள்ளிகள் சரிந்து 24,320.55 ஆக இருந்தது.
+ There are no comments
Add yours