இந்தியாவில் பேக்கேஜிங் செய்யப்பட்ட பொருட்களுக்காக சட்டமுறை எடையளவு சட்டம், 2009 (Legal Metrology Act) அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி, ப்ராடக்ட்டின் லேபிள்கள் அல்லது பேக்கேஜினில் MRP தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
எம்.ஆர்.பி. (MRP) விட அதிகமான விலைக்கு ப்ராடக்டுகளை விற்பனை செய்வது சட்ட மீறலுக்கு சமம். இதற்கு அபராதங்கள் வசூல் செய்யப்படும்.
இந்த விதியின் படி, பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு குறிப்பிட்ட லேபிலிங் தேவைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மொத்த அளவு, MRP, உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி போன்றவை அடங்கும்.
ஒரு கடைக்காரர் MRP விட அதிக விலைக்கு கன்ஸ்யூமர்களுக்கு பொருட்களை விற்பனை செய்தால், அக்கடை எங்கு இருக்கிறது என்பதை பொருட்படுத்தாமல் நுகர்வோர் சட்டமுறை எடையளவு துறையினரிடம் புகார் செய்யலாம்.
எங்கு புகார் அளிக்க வேண்டும்?
கன்ஸ்யூமர்கள் 1800-11-4000/ 1915 என்ற எண்ணில் தேசிய நுகர்வோர் உதவி எண்ணை அழைக்கலாம் அல்லது அவர்களது மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் மன்றத்தில் புகாரை பதிவு செய்யலாம்.
8800001915 என்ற எண்ணுக்கு SMS மூலமாகவும் புகார் அளிக்கலாம். NCH APP மற்றும் Umang அப்ளிகேஷன் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் உள்ளது.
மேலும் கன்ஸ்யூமர்கள் https://consumerhelpline.gov.in/user/signup.php. என்ற வெப்சைட் மூலமாக ஆன்லைனிலும் புகாரை பதிவு செய்யலாம். ஆன்லைனில் பதிவு செய்ய இந்த தளத்தில் நீங்கள் ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேஷன் செயல்முறையை நிறைவு செய்வது அவசியம்.
பதிவு செய்ய http://consumerhelpline.gov.in என்ற போர்ட்டலுக்கு சென்று லாகின் லிங்கை கிளிக் செய்யவும். பின்னர் தேவையான விவரங்களுடன் சைன் அப் செய்து உங்களுடைய இமெயில் ஐடியை வெரிஃபை செய்யவும். உங்களுக்கான யூசர் ID மற்றும் பாஸ்வேர்டு உருவாக்கப்படும்.
இதில் நீங்கள் புகாரை பதிவு செய்த பிறகு அது சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதில் உங்களுக்கு திருப்தி ஏற்படாத பட்சத்தில் நீங்கள் நுகர்வோர் ஆணையத்தை அணுகலாம்.
+ There are no comments
Add yours