ஊழியர்கள் தங்களது எம்பிளாயிஸ் பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) அக்கவுண்ட்டை தங்களுடைய ஆதார் நம்பர் மற்றும் பிற ஆவணங்களோடு இணைக்க வேண்டும்.
இந்நிலையில், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக நோ யுவர் கஸ்டமருக்கான KYC (Know Your Customer) தேவை அதிகரித்துள்ளது.
EPF மெம்பர்கள் மிக எளிமையாக அவர்களுடைய அக்கவுண்ட் தகவல்களை அப்டேட் செய்து KYC ஐ ஆன்லைனில் நிறைவு செய்யலாம்.
EPFO இன் இந்த புதிய வசதி ஜாயிண்ட் டிக்ளரேஷன் (கூட்டு பிரகடனம்) என்று அழைக்கப்படுகிறது. உங்களுடைய EPF அக்கவுண்டில் நீங்கள் ஏதேனும் மாற்றங்களை செய்ய நினைத்தால் இந்த ஜாயிண்ட் டிக்ளரேஷன் படிவத்தை ஆன்லைனில் நிரப்பினால் போதுமானது.
கே.ஒய்.சி. அப்டே் செய்வது எப்படி?
1) மெம்பர் இ-சேவா வெப்சைட்டுக்கு சென்று உங்களுடைய பாஸ்வேர்ட், கேப்சா கோட் மற்றும் UAN (Universal Account Number) ஐ என்டர் செய்து லாகின் செய்யவும். உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள போன் நம்பரில் பெறப்பட்ட OTP ஐ என்டர் செய்யவும்.
2) மீண்டும் கேப்சா மற்றும் OTP ஐ என்டர் செய்யவும்
3) லாகின் செய்த பிறகு ‘Manage’ மெனுவில் இருக்கும் ‘Joint Declaration’ என்பதை கிளிக் செய்யவும்.
4) தேவையான மாற்றங்களை செய்த பிறகு ஆதாரை பயன்படுத்தி அடையாளத்தை உறுதி செய்வதற்கு நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள் என்ற முறையில் பாக்ஸை டிக் செய்யவும். அடுத்து ‘Proceed’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
5) நீங்கள் கோரிக்கை விடுத்துள்ள மாற்றங்களின் அடிப்படையில் தேவையான ஆவணங்களை அப்லோட் செய்யவும். டாக்குமெண்ட்களை அப்லோட் செய்த பிறகு ‘Submit’ என்பதை கிளிக் செய்யவும்.
உங்களுடைய மாற்றங்கள் அங்கீகரிக்கப்பட்டதும் EPFO போர்ட்டலில் அனைத்து மாற்றங்களும் காண்பிக்கப்படும். பொதுவாக KYC அப்டேட் செய்வதற்கான செயல்முறை நிறைவடைவதற்கு 20 முதல் 25 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours