இந்தியாவில் நத்திங் ‘போன் (2a) பிளஸ்’ ஸ்மார்ட்போன் அறிமுகம்- விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்.

Spread the love

Nothing OS 2.5.5a update is rolling out for Phone 2a users worldwide with ChatGPT integration and many new features.

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நத்திங் ‘போன் (2a) பிளஸ்’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த மார்ச் மாதம் நத்திங் போன் (2a) வெளியாகி இருந்தது. தற்போது அதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனாக போன் (2a) பிளஸ் வெளிவந்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ல் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei). இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-ல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார்.

இதுவரை நத்திங் போன் (1), நத்திங் போன் (2) சந்தையில் வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் நத்திங் போன் (2a) ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. அண்மையில் ‘CMF’ என்ற துணை நிறுவனத்தை நத்திங் தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நத்திங் போன் (2a) பிளஸ் மாடல் வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள்:

6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே
மீடியாடெக் டிமான்சிட்டி 7350 சிப்செட்
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
5,000mAh பேட்டரி
50 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
பின்பக்கம் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. இரண்டும் 50 மெகாபிக்சல் உடன் வெளிவந்துள்ளது
முன்பக்க கேமராவும் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது
8/12ஜிபி ரேம்
256ஜிபி ஸ்டோரேஜ்
இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்
இந்த போனின் விலை ரூ.27,999 முதல் தொடங்குகிறது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours