சென்னை: சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,205-க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.57,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனையாகிறது.
உலக அளவில் தங்கம் அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழலைப் பொறுத்து இந்தியாவின் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது உச்சத்தை தொட்டிருந்த தங்கம் விலை அதன் பின்னர் சற்றே குறைந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்வு கண்டு வருகிறது.
இந்தச் சூழலில் இன்று பவுனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனையாகிறது.
+ There are no comments
Add yours