மத்திய அரசு விவசாயிகளுக்காக, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும். அதாவது 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை அரசு 16 தவணை பணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது. அதன்படி இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.32,000 செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு விவசாயிகளின் வங்கி கணக்கில் 16வது தவணை பணம் செலுத்தியது. இதனை அடுத்து 17வது தவணை பணம் எப்போது செலுத்தப்படும் என விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், 17வது தவணை எப்போது செலுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், விரைவில் 17வது தவணை பணம் செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜூன் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours