இந்தியாவில் தயாரிக்கப்படும் இயற்கை மருந்துப் பொருட்களை, வெளிநாடுகளில் திறமையாக சந்தைப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ராஜேந்திரன் ஆனைமுத்து முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்.
பேராசிரியர் டாக்டர் ராஜேந்திரன் ஆனைமுத்து, இயற்கை மருந்து பொருட்களின் ஏற்றுமதி தொழில் வாய்ப்புகள் குறித்து ஆராய கென்யாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ள்ளார். தேசிய அருங்காட்சியகங்களின் இயக்குநர் ஜெனரல் பேராசிரியை மேரி கிகுங்கு, தேசிய ஒருங்கிணைப்பாளர் இயற்கைப் பொருட்கள் தொழில்துறை டாக்டர் தாராசா என். எவன்ஸ் மற்றும் டாக்டர் ஹசன் அகமது ஆகியோரை, பேராசிரியர் ராஜேந்திரன் ஆனைமுத்து நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக, பிரித்தெடுத்தல், செயலில் உள்ள பொருட்களை தனிமைப்படுத்துதல் மற்றும் நிலைத்தன்மை ஆய்வுகள் உள்ளிட்ட பைட்டோ-புதுமை செயல்முறைகளை மேம்படுத்துவதில் பேராசிரியர் டாக்டர். ராஜேந்திரன் அவர்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். மேலும் இந்தியத் தயாரிப்பில் செயல்படும் மருந்துப் பொருட்களை, வளர்ந்த நாடுகளில் திறமையாக சந்தைப்படுத்தும் அங்கீகாரத்தை அவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours