இந்திய சந்தையில் ரியல்மி சி63 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்- 20 ம் தேதி முதல் விற்பனை

Spread the love

சென்னை: இந்திய சந்தையில் ரியல்மி சி63 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. ரியல்மி நிறுவனம் ‘சி’ வரிசை போன்களில் சி63 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

6.67 இன்ச் டிஸ்பிளே
மீடியாடெக் டிமான்சிட்டி 5300 சிபிசெட்
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
5,000mAh பேட்டரி
10 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
பின்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா
8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ளது
4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம்
128ஜிபி ஸ்டோரேஜ்
5ஜி நெட்வொர்க்
வரும் 20-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது
இதன் விலை ரூ.9,999 முதல் ஆரம்பமாகிறது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours