விவசாயிகளுக்கு ரூ.50,000 வழங்கும் திட்டம்…விண்ணப்பித்து விட்டீர்களா?

Spread the love

இந்திய அரசு 2015 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்காக பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய அரசு நிதியுதவி வழங்குகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். பிகேவிஒய் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரூ. 1.197 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் இயற்கை விவசாயம் அதிகரித்து பூச்சிக்கொள்ளிகளின் பயன்பாடு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோராக இருந்தால் விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோருக்கு விவசாய சாகுபடி நிலம் இருக்க வேண்டும். பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனாவின் கீழ் விண்ணப்பிக்க சில ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, ஆதார், முகவரிச் சான்று, வருமானச் சான்று, அடையாள அட்டை, ரேஷன் அட்டை, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கட்டாயம்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

முதலில் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். முகப்பு பக்கத்தில் அப்ளை என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்ப வேண்டும். பெயர், மொபைல் எண், முகவரி, மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை நிரப்பி விண்ண படிவத்துடன் தேவையான ஆவணங்களை பதிவேற்றி பின் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு பதிவு எண் அனுப்பி வைக்கப்படும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours