முதலீடு என்பது அதிக சேமிப்பை வைத்திருக்கும் பணக்காரர்களுக்கானது என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால், உங்கள் மாத வருமானத்திற்கு ஏற்றவாறு சிறிய தொகையையே முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டை நீங்கள் நீண்ட காலத்திற்கு தொடர வேண்டும். முடிந்தால், உங்கள் மாத வருமானம் உயரும்போது முதலீட்டு தொகையையும் அதிகரிக்கலாம்.
ரூ. 500 மட்டும் மாதம் முதலீடு செய்து லட்சம் ரூபாயை பெறுவதற்கான பல திட்டங்கள் உள்ளன.
எஸ்ஐபி (SIP)
கடந்த சில வருடங்கனாக SIP மிகவும் சிறந்த வருமானத்தை ஈட்டியுள்ளது. SIP சில ஆண்டுகளிலேயே வேகமாக பிரபலமைடைந்துள்ளது.
SIPயில் சராசரியாக 12 சதவீதம் வருமானம் கிடைக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
மக்கள் SIP மூலம் நீண்ட காலத்திற்கு நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.
எஸ்ஐபியில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை உங்கள் திறமைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் அதிகரித்துக் கொள்ளலாம். இதன்மூலம் அதிக லாபத்தையும் பெற முடியும்.
12 சதவீத வருமானத்தின்படி கணக்கிட்டு, எஸ்ஐபியில் ரூ.500 மாதம் முதலீடு செய்தால், 15 வருடத்திற்குப் பிறகு, ரூ.2,52,288 முதிர்வுத் தொகையாக எடுக்கலாம்.
மேலும் 20 வருடத்திற்குப் பிறகு, முதிர்வுத் தொகை ரூ.4,99,574 எடுக்கலாம்.
பிபிஎஃப் (PPF)
ரூ. 500ல் கூட முதலீட்டைத் தொடங்கக்கூடிய அஞ்சல் அலுவலகத் திட்டம் PPF.
பிபிஎஃப் திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்வது அவசியம்.
இந்தத் திட்டத்தில், 7.1 சதவீத வட்டி விகிதத்தில் கூட்டு வட்டியின் பலனைப் பெறுவீர்கள்.
பிபிஎஃப் திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும்.
ஒவ்வொரு மாதமும் ரூ.500 டெபாசிட் செய்தால் பிபிஎஃப் கணக்கீட்டின்படி, 15 ஆண்டுகளில், நீங்கள் ரூ.1,62,728 திரும்பப் பெறுவீர்கள்.
அதேசமயம், இந்த திட்டத்தை இன்னும் 5 ஆண்டுகள் தொடர்ந்தால், 20 ஆண்டுகளில் ரூ. 2,66,332 கிடைக்கும்.
எஸ்.எஸ்.ஒய்
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டு அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
தற்போது இந்த திட்டத்தில் 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது.
இத்திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்பட வேண்டும் மற்றும் திட்டம் 21 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும்.
இந்தத் திட்டத்தில் மாதம் ரூ. 500 வீதம் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் உங்கள் மொத்தச் செலவு ரூ.90,000 ஆக இருக்கும்.
15 மற்றும் 21 ஆண்டுகளுக்கு இடையில் நீங்கள் எந்த முதலீடும் செய்ய மாட்டீர்கள், ஆனால் உங்கள் தொகையில் 8.2 சதவீத வட்டி தொடர்ந்து சேர்க்கப்படும்.
திட்டம் முதிர்ச்சியடையும் போது, ரூ 2,77,103 கிடைக்கும்.
போஸ்ட் ஆபிஸ் RD
போஸ்ட் ஆபிஸ் RDயும் ஒரு சிறந்த வழி.
ஆர்டி திட்டம் 5 ஆண்டுகளுக்கு செய்யப்படுகிறது.
இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் தற்போது 6.7 சதவீதமாக உள்ளது.
ரூ. 100 ல் போஸ்ட் ஆபிஸ் ஆர்டியில் முதலீடு செய்யத் தொடங்கலாம்.
ஆனால் ஒவ்வொரு மாதமும் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ.30,000 ஆக இருக்கும், அதற்கு வட்டியாக ரூ.5,681 கிடைக்கும்.
திட்டத்தின் முதிர்ச்சியின் போது, ரூ. 35,681 கிடைக்கும்.
+ There are no comments
Add yours