5 ஆண்டுகளில் 12000% வருமானம் தந்த ஸ்மால்கேப் பங்குகள்!

Spread the love

பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் அந்த முதலீட்டின் மூலமாக நல்ல வருமானம் ஈட்ட வேண்டுமென நினைக்கின்றனர். இருப்பினும், பங்கு முதலீட்டில் சில்லறை வர்த்தக பங்கேற்பில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் போன்ற பாரம்பரிய முதலீடுகளுடன் ஒப்பீடும் போது பங்குச்சந்தையில் சற்று கூடுதல் வருமானம் கிடைக்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர்.

முதலீட்டாளர்கள் பலரும் ஸ்மால்கேப் பங்குகள் மற்றும் பென்னி பங்குகளிம் விலை குறைவாக இருப்பதால் அதில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்புகின்றனர். மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் சில ஸ்மால்கேப் பங்குகள் 12000% வருமானம் கொடுத்துள்ளன. இது போன்ற முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் தந்த 5 ஸ்மால் கேப் பங்குகளைப் பார்ப்போம்.

லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ்

லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான வருமானத்தை கொடுத்துள்ளது. அதாவது ஒரு பங்கின் விலை ரூ.0.55 லிருந்து ரூ.66.85 வரை உயர்ந்துள்ளது. கிட்டதட்ட பங்கின் விலை 12000% உயர்ந்துள்ளது.

இந்த நிறுவனம் ஹைட்ரோகார்பன் துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு, எஃகு ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், அணுமின் நிலைய கொதிகலன்கள் மற்றும் விரிவான ஆயத்த தயாரிப்பு திட்டங்கள் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு வலுவான உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் அமைப்புகளின் வளர்ச்சி, உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

ரத்தன்இந்தியா எண்டர்பிரைசஸ்

ரத்தன்இந்தியா எண்டர்பிரைசஸ் கடந்த ஐந்தாண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு சிறப்பான வருமானத்தை வழங்கியுள்ளது. அதாவது பங்கின் விலை ரூ. 1.75 என்ற நிலையிலிருந்து ரூ.75 வரை உயர்ந்துள்ளது.

அதாவது பங்கின் விலை கிட்டதட்ட 4185% வளர்ச்சி அடைந்துள்ளன.
ரத்தன் இந்தியா குழுமத்தின் முதன்மை நிறுவனமாக, ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ் நிறுவனம் பல்வேறு துறைகளில் புதிய-யுக வணிகங்களுக்கு முன்னோடியாக முன்னணியில் உள்ளது. Cocoblu Retail போன்ற ஈ-காமர்ஸ் முயற்சிகள் முதல் Revolt Motors நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் வரை அதிநவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

ஐநாக்ஸ் விண்ட்

ஐநாக்ஸ் விண்ட் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட காற்றாலை ஆற்றல் ப்ளேயர், சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது. நிறுவனத்தின் வளர்ச்சி அதன் வலுவான செயல்திறனைப் பிரதிபலிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், நிறுவனத்தின் பங்கு விலை 787 சதவிகித உயர்ந்துள்ளது. தற்போதை ஐநாக்ஸ் விண்ட் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.150.91 ஆக உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours