இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Spread the love

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்​கடல், அதை ஒட்டிய தென்​கிழக்கு வங்கக்​கடல் பகுதி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு​கிறது. இதன் காரண​மாக, தெற்கு வங்கக்​கடலின் மத்திய பகுதி​களில் இன்று (டிச.7) ஒரு காற்​றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்​கூடும். இதன் காரணமாக இன்று முதல் 10-ம் தேதி வரை தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகுதி​களிலும் மழை பெய்​யக்​கூடும்.

டிச. 11-ம் தேதி தமிழக கடலோர மாவட்​டங்​களில் ஒருசில இடங்​களி​லும், உள் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும் லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். இவ்​வாறு அ​தில் கூறப்​பட்டுள்​ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours