தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

Spread the love

தீபாவளி நெருங்கி வரும் நிலையில், தமிழக முழுவதும் கனமழையும் விடாமல் பெய்து வருகிறது.

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக, கேரளா, மாஹே, தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால், ஓரிரு இடங்களில் 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மிக கனமழை பதிவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், புத்தாடை மற்றும் பட்டாசு வாங்குவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், தீபாவளி அன்றும் மழை பெய்யும் என்றால், கொண்டாட்டம் களையிழந்து காணப்படும் என்று பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours