ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்களில் சிலர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வருவது உலக நாடுகளிடையே பேசு பொருளாக மாறி உள்ளது.
ஈரான் நாட்டின் அதிபரான இப்ராஹிம் ரைஸி நேற்று ஹெலிகாப்டர் மூலம் நாட்டின் வடக்கு பகுதியில் அசர்பைஜன் நாட்டின் எல்லையில் உள்ள ஜூல்பா பகுதியில் அணை ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்றிருந்தார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் அவர் தலைநகர் டெஹ்ரானுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இப்ராஹிம் ரைஸி மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும் அதிகளவில் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்றைய தினம் ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல்வேறு பகுதிகளில் இரவு வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து, அதிபரின் மரணத்திற்கு எதிராக தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
ஈரான் நாட்டில் பெண்கள் மீதான அடக்கு முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இஸ்ரேல் நாட்டில் ஹிஜாப் அணிந்த பெண்கள் சிலர், வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கி உள்ளனர். ஈரான் நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான மக்களும் அதிபரின் நிலை குறித்து கவலையோடு காத்திருக்கும் நிலையில், சிலரின் இந்த செய்கை உலக நாடுகளிடையே பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் அதிபர்
+ There are no comments
Add yours