இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரிப்பு!

Spread the love

அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்து வருவதாக இந்திய – அமெரிக்ககாங்கிரஸின் ஸ்ரீ தனேதார் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் சமீபகாலமாக இந்துக்கள் குறி வைத்து தாக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளதுஅங்கு வசிக்கும்இந்திய – அமெரிக்க காங்கிரஸ்காரரும்மக்கள் பிரதிநிதியுமான ஸ்ரீ தனேதார் மற்றும் இந்தியஅமெரிக்கர்களானரோ கன்னாராஜா கிருஷ்ணமூர்த்திஅமி பெராபிரமிளா ஜெயபால் ஆகியோர் சமீபத்தில்அமெரிக்காவின் இந்துகோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை கோரி அந்நாட்டுநீதித்துறைக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீ தனேதார் இது தொடர்பாக கூறியதாவது:

இன்று அமெரிக்காவில் இந்து மதம் மீதான தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்து வருவதை நான் காண்கிறேன்ஆனால்இது தொடர்பாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றனதாக்குதல்களுக்குக் காரணமானவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லைஇதுவரை யாரும் கைது செய்யப்படவில்லைகடந்த சிலமாதங்களில் இதுபோன்ற கணிசமான தாக்குதல் சம்பவங்களை நாம் அனுபவித்திருக்கிறோம்.

இந்து சமூகத்தின் அச்சுறுத்தலுக்கு எதிரான மிகவும் ஒருங்கிணைந்த முயற்சியின் ஆரம்பம் இதுஇப்போது ஒன்றாகநிற்க வேண்டிய நேரம் இதுகலிபோர்னியாநியூயார்க் என அமெரிக்கா முழுவதும் இந்து சமூகத்தினர் மீதானதாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றனகுறிப்பாகவழிபாட்டுத் தலங்களில் திட்டமிட்டு இத்தகைய தாக்குதல்கள்நடத்தப்படுகின்றனஇது இந்துக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளத

முழு சமூகமும் ஒன்றிணைந்து சமத்துவத்தை உறுதிசெய்ய வேண்டிய நேரம் இதுஇதைத் தான் நாங்கள்நீதித்துறையிடமும் கோருகிறோம்இந்து மதத்துக்கு எதிரான இத்தகைய வெறுப்பை நாங்கள் பொறுத்துக்கொள்ளமாட்டோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவில் இந்துக்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதாக வெளியாகி உள்ள குற்றச்சாட்டு பரபரப்பைஏற்படுத்தியுள்ளது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours