வங்கதேச எல்லையில் சட்டவிரோதமாக நுழைந்த தமிழக சிறப்பு உதவி ஆய்வாளரை வங்கதேச ராணுவத்தினர் கைது விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.வங்கதேசம் ஜானியாபாத் என்ற இடத்தில் வங்கதேச ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய எல்லையில் இருந்து சட்டவிரோதமாக வங்கதேசத்தில் நுழைந்த சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை ராணுவத்தினர் கைது செய்தனர்.
அந்த நபரின் உடமைகளை வங்கதேச ராணுவத்தினர் சோதனை செய்த போது அதில் தமிழ்நாடு காவல்துறை அடையாள அட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த நபரிடம் வங்கதேச ராணுவத்தினர் விசாரணை நடத்தியதில், அவர் திருச்சியை சேர்ந்த ஜான் செல்வராஜ் என்பதும், தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
மேலும், ஜான் செல்வராஜ் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் நுழைய முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.தமிழக காவல்துறை / போலீஸ் பாதுகாப்புவங்கதேச ராணுவத்தினர் இதுகுறித்து இந்திய ராணுவத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து மத்திய அரசு மூலம் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது இந்திய ராணுவம். வங்கதேச ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் உதவி ஆய்வாளர் ஜான் செல்வராஜ், சேலையூர் காவல் நிலையத்தில் குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பணியில் இருந்தார். அதனால் அவருக்கும் தீவிரவாத கும்பல்களுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அடிக்கடி விடுப்பில் சென்றுவிடும் ஜான் செல்வராஜ், அண்மையில் கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இருந்த போதும் சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர், பணிகளை முடித்துவிட்டு செல்லுமாறு கூறியதால், மருத்துவ விடுப்பில் சென்றிருக்கிறார்
+ There are no comments
Add yours