அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் எந்த தேதியில் வாக்குப் பதிவு நடைபெறும்? எந்த தேதியில் புதிய அதிபர் பதவியேற்பார் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறும். அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம்தேதி புதிய அதிபர் பதவியேற்பார்.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோபிடன் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் கமலா ஹாரிஸ். குடியரசு கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக மீண்டும் களம் காண்கிறார் மைக் பென்ஸ்.
இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு பெருகி வருகிறது; ராய்ட்டர்ஸ்- இப்சோஸ் நடத்திய அடுத்த அதிபர் யார் என்ற கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸூக்கு 47 சதவீதமும், ட்ரம்புக்கு 45 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது
+ There are no comments
Add yours