உண்மை சம்பவத்தில் உருவான ‘ஜெர்க்’…!

Spread the love

30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் திரில்லர் படம் ‘ஜெர்க்’.

2K புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் அப்புகுட்டி, நாடோடிகள் பரணி, குமரவடிவேல், ஃபிராங் ஸ்டார் ராகுல், காயத்ரி, யாத்திசை படத்தில் நடித்த சித்து குமரேசன் ஆகியோர் முக்கிய கதாபாத் திரங்களில் நடித்துள்ளனர். மற்றும் குட்டி கோபி, ஃபிராங் ஸ்டார் அசார், பிரேமா, சூப்பர்குட் சுப்ரமணி, ராஜ்குமார், பழனிச்சாமி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஆலன் பரத், இசை – தரண் குமார், பாடல்கள் – கு.கார்த்திக், படத்தொகுப்பு – சுனில் காசிப், ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா, கலை இயக்கம் – அன்பரசு, நடன இயக்கம் – இருசன், பத்திரிக்கை தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – 2K புரொடக்ஷன்ஸ், இயக்கம் – குரு.

இந்தப் படம் பற்றி இயக்குநர் குரு பேசும்போது, “மலைப் பிரதேசங்களில் இயற்கை வளத்தையும், நம் மண்ணையும், பல தலைமுறைகளாக தங்களது உழைப்பால் பாதுகாத்து வரும் மக்கள் முதலாளித்துவத்தால் இன்றுவரை அடிமைப்பட்டுத்தான் கிடக்கிறார்கள். அவர்களது முன்னேற்றம் இன்றுவரை கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

அப்படி 30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத் தொடர்பே இல்லாத தமிழகத்தின் ஒரு முக்கியமான மலைபிரதேசத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம்.

படப்பிடிப்பு முழுவதையும் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த மலைப் பகுதியில் நடத்தியிருக்கிறோம்.

இசையாமைப்பாளர் தரண்குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் பலம். இந்த படத்தில் இடம் பெறும் ” நீல மலையே ” என்ற பாடலை அய்யப்பனும் கோஷியும் படத்தில் பாடியதற்கு தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சமாள் பாடியிருக்கிறார்.

“உன்னை போல யாருமில்ல” என்ற பாடலை வைக்கம் விஜயலட்சுமியும், “மஜா மஜா” என்ற பாடலை செந்தில் ராஜலட்சுமியும் பாடியிருக்கிறார்கள்.

இந்த மூன்று பாடல்களுக்கும் தரண் குமார் சிறப்பாக இசையமைத்துள்ளார். நிச்சயம் இந்த மூன்று பாடல்களும் இந்த வருடத்தின் வெற்றி பாடல் மட்டுமல்லாமல் இணையத்தளங்களை அலங்கரிக்கும் பாடல்களாகும் என்பது எங்களது நம்பிக்கை.

தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரையரங்குகளில் வெளியிட இருக்கிறோம்..” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours