கேப்டன் மில்லரை பாராட்டி அமைச்சர் உதயநிதி பதிவு!

Spread the love

நடிகர் தனுஷ் நடிப்பில் பீரியட் ஆக்‌ஷன் டிராமா பாணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கன்னட நடிகர் ஷிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், நாசர் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததால் இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு/ஏ’ தர சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் கடும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவுக்கு முன்னர் நடக்கும் இந்தக் கதையில் சாதாரண இளைஞனான அனலீசன் (தனுஷ்) எப்படி ஒடுக்குமுறையால் ‘கேப்டன் மில்லர்’ எனும் அவதாரம் எடுக்கிறான் என்பதைக் குறித்து படம் பேசுகிறது.

படத்தின் அரசியல் தொடர்பான காட்சிகள், ஸ்டன்ட் மற்றும் மேக்கிங் உள்ளிட்ட விஷயங்களுக்காகப் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தனுஷின் இந்த படத்தினை அமைச்சர் உதயநிதி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷிற்கும், நடிகர் சிவராஜ்குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகை பிரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழு அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் captain miller என்று அமைச்சர் உதயநிதி தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours