தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடியவர் விஜய் தேவரகொண்டா. கடைசியாக இவரது நடிப்பில் ‘குஷி’ திரைப்படம் வெளியானது. அடுத்து ‘ஃபேமிலி ஸ்டார்’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசிய பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். அனந்தபூரைச் சேர்ந்த வெங்கட கிரண் தனது ‘சினி போலீஸ்’ என்ற யூடியூப் சேனலில் விஜய் தேவரகொண்டா மற்றும் அவருடன் நடித்த ஹீரோயின் ஒருவருடன் இணைத்து வதந்திகளைப் பரப்பும் விதமாக பேசினார்.
இதைப் பார்த்த விஜய் தேவரகொண்டா அவர் மீது கடும் கோபம் கொண்டு, சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். இந்த புகார் கொடுத்த சில மணி நேரத்திலேயே அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வீடியோக்களை நீக்கச் சொல்லி உள்ளனர். இதுமட்டுமல்லாது, அவர் மேல் வழக்கு எதுவும் போடாமல் அறிவுரை மட்டும் சொல்லி போலீஸ் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
+ There are no comments
Add yours