ரஜினிக்கு வில்லனாகும் ‘மைக்’ மோகன்!

Spread the love

நடிகர் விஜய் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் ‘தலைவர் 171’ படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு நடிகர் மோகனுக்கு கிடைத்திருக்கிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

’வேட்டையன்’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 171’ திரைப்படம் உருவாக இருக்கிறது. இதன் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22 அன்று வெளியாக இருக்கிறது. இதன் டைட்டில் டீசரை முன்பே பார்த்த ‘அனிமல்’ பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அருமையாக வந்திருப்பதாக சொன்னார்.

ரஜினி ஜோடியாக நடிகை ஷோபனா நடிக்க இருக்கிறார் என்றும் லோகேஷின் முந்தைய படங்களான ‘மாநகரம்’, ‘கைதி’ போல இந்தப் படமும் ஒரே இரவில் நடக்கக்கூடியது என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் குறிப்பாக வில்லன் யார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் ‘வெள்ளி விழா நாயகன்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘மைக்’ மோகன் தான் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. நடிகர் விஜயின் ‘GOAT’ படத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ படங்களில் நடித்த விஜய்சேதுபதிக்கும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை வைத்திருக்கிறாராம் லோகேஷ்.

இவர்களோடு இன்னொரு சர்ப்ரைஸாக நடிகர் ஷாருக்கான் படத்தில் கேமியோவில் நடிக்கிறாராம். ‘தலைவர் 171’ படத்தின் நடிகர்கள் தேர்வு குறித்தான செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கும் நிலையில், இந்த விஷயங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours