கொலை வழக்கில் நடிகர் கைது: கன்னட திரையுலகில் பரபரப்பு !

Spread the love

கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விஷயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எனப் பன்முகம் கொண்டவர் நடிகர் தர்ஷன். ’அனதாரு’, ’கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா’ உள்ளிட்டப் படங்களில் நடித்துப் பிரபலமானார் தர்ஷன். இவர் தூகுதீபா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

சமீபத்தில் மாடல் பவித்ரா கெளடாவுடன் திருமணம் தாண்டிய உறவு வைத்திருந்ததற்காக பேசுபொருளானார் நடிகர் தர்ஷன். இதற்காக தர்ஷனின் மனைவி விஜயலக்‌ஷ்மி, பவித்ரா கெளடாவை மிரட்டியதாகவும் செய்தி வெளியானது.

பவித்ரா கவுடாவை ஆன்லைனில் துன்புறுத்தியதற்காக பேசுபொருளான ரேணுகா சுவாமி என்ற நபர் கடந்த ஜூன் 8ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சுவாமி, தர்ஷனுக்குச் சொந்தமான மைசூர் பண்ணை வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு, சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். அவரது உடல் ஜூன் 9 அன்று காமக்ஷிபாளையாவுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது.

சித்ரதுர்காவில் பதிவு செய்யப்பட்ட காணாமல் போனதாக ரேணுகா சுவாமி பற்றி கொடுத்த புகார் அடிப்படையில் காவல்துறை முதற்கட்ட விசாரணை செய்துள்ளது. விசாரணையின் போது, ​​பணப் பிரச்னை காரணமாக ரேணுகா சுவாமியைக் கொன்றதாகக் கூறி 3 பேர் சரணடைந்தனர்.

இருப்பினும், மேலதிக விசாரணையில் தர்ஷனுக்கும் இதில் தொடர்பு இருப்பதை பெங்களூரு காவல்துறையினர் கண்டறிந்தனர். மைசூருவில் உள்ள பண்ணை வீட்டில் தர்ஷன் இருந்தபோது இன்று கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தர்ஷன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours