மலையாள இயக்குநர் ரஞ்சித் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக நடிகை ஸ்ரீலேகா மித்ரா குற்றம் சாட்டியிருப்பது திரையுலகில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
மலையாள திரையுலகில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என ஹேமா கமிட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கை இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இயக்குநர் மற்றும் கேரளா ஸ்டேட் ஃபிலிம் அகாடெமி சேர்மன் ரஞ்சித் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா குற்றம் சாட்டியிருப்பது மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ’பலாரி மாணிக்கம்’ என்ற படத்தில் நடிப்பதற்காக சென்றபோது தகாத முறையில் இயக்குநர் ரஞ்சித் தன்னை தொட்டதாக ஸ்ரீலேகா மித்ரா குற்றம் சாட்டியிருக்கிறார்.
பாலியல் ரீதியாக தன்னிடம் அத்துமீறவில்லை என்றாலும் அதற்கான அறிகுறியாகவே இது தென்பட்டது என ஸ்ரீலேகா மித்ரா கூறியிருக்கிறார். ஆனால், ஸ்ரீலேகாவின் இந்த குற்றச்சாட்டை இயக்குநர் இரஞ்சித் மறுத்திருக்கிறார். ”’பலாரி மாணிக்கம்’ படத்திற்காக நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்ரீலேகா நடிக்கவில்லை. அதனால், அவரை ஆடிஷனில் தேர்வு செய்யாததை மனதில் வைத்தே அவர் இவ்வாறு பேசுகிறார். இங்கு நான் தான் பாதிக்கப்பட்டவன்” என்று ஸ்ரீலேகாவின் புகாரை மறுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.
+ There are no comments
Add yours