சென்னை: பின்னணிப் பாடகி சுசித்ராவுக்கு எதிராக நடிகை ரீமா கல்லிங்கல் புகார் கொடுத்திருக்கிறார்.
நடிகர்கள் பற்றியும் பல சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொடர்ந்து யூடியூப் தளத்தில் பேசி வருகிறார் பின்னணிப் பாடகி சுசித்ரா. அந்த வகையில் சமீபத்தில் நடிகை ரீமா கல்லிங்கல்ஸ் இளம் பெண்களுக்கு போதை விருந்து கொடுப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இதுதொடர்பாகதான் சுசித்ரா மீது புகார் கொடுத்திருக்கிறார் ரீமா. கேரளாவில் பாலியல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக மான நஷ்ட ஈடு கேட்டு சுசித்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் ரீமா முடிவு செய்திருக்கிறார்.
தன்னைப் பற்றி சுசித்ரா சொல்லியிருக்கும் விஷயங்கள் எதுவும் ஆதாரமற்றது எனவும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் ரீமா கல்லிங்கல்ஸ் தெரிவித்திருக்கிறார். இந்த விஷயம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
+ There are no comments
Add yours