நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது ‘லால் சலாம்’

Spread the love

ஓடிடி வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது ‘லால் சலாம்’ படக்குழு. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லால் சலாம்’. லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று, தோல்வியை தழுவியது இப்படம். மேலும், படத்தின் ஹார்ட் டிஸ்க் தொலைந்துவிட்டதால் திட்டமிட்டது போன்று எடிட் செய்வதற்கு காட்சிகள் இல்லை என்று பேட்டியொன்றில் கூறியிருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதுமட்டுமன்றி, படத்தின் ஓடிடி உரிமையினையும் கைப்பற்ற யாரும் முன்வரவில்லை.

தற்போது நீண்ட முயற்சிக்குப் பின் ‘லால் சலாம்’ ஓடிடியில் வெளியாக இருக்கிறது. நெட்ப்ளிக்ஸ் தளம் இதன் உரிமையை கைப்பற்றி இருக்கிறது. அதுமட்டுமன்றி, ஹார்ட் டிஸ்க்களில் இருந்து முழுமையாக படத்தின் காட்சிகளையும் எடுத்துவிட்டதாம் படக்குழு. இதனால் அதனை வைத்து படத்தை திட்டமிட்டவாறு எடிட் செய்து வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

ஹார்ட் டிஸ்க்களில் இருந்து காட்சிகளை எடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் தான் உதவி செய்திருக்கிறார். மேலும், அதற்குப் பின்னணி இசைக் கோர்ப்புக்கும் எந்தவொரு பணமும் பெறாமல் செய்துக் கொடுக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனால் விரைவில் ஓடிடி வெளியீட்டு தேதியை முடிவு செய்து அறிவிக்கவுள்ளது ‘லால் சலாம்’ படக்குழு.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours