எழுத்தாளர் மற்றும் சினிமா திரைக்கதை ஆசிரியர் ஜெயமோகன் சமீபத்தில் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தை பார்த்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்றும் குறிப்பாக மலையாள பொறுக்கிகள் என்றும் குடிகாரர்கள் என்றும் அவர் விமர்சனம் செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.
இந்நிலையில் ஜெயமோகனின் கருத்துக்கு மலையாள எழுத்தாளர் உண்ணி என்பவர் கடுமையாக கண்டித்து உள்ளார். ஜெயமோகனின் எழுத்தில் விஷமத்தனம் இருப்பதாகவும் குடிப்பவர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்பது பார்ப்பனியத்தின் வாதம் என்றும் மலையாளிகள், கள் இறக்கும் தொழில் செய்தாலும், ஆண் பெண் பேதமின்றி மது அருந்தினாலும் நாகரிகமானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
’மஞ்சும்மெல் பாய்ஸ்’ படம் நண்பர்களின் அடித்தட்டு வாழ்க்கை வாழ்பவர்களின் கூறும் கதை என்றும் அவர்கள் குடிகாரர்களாக இருந்தாலும் ஒரு பிரச்சனை ஏற்பட்ட போது அவர்கள் நண்பனுக்காக உயிரையே கொடுக்க வந்தவர்கள் என்றும், அது ஜெயமோகன் கண்ணில் படவில்லையா என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்திலும் சரி கேரளாவிலும் சரி இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது தமிழர்களும் மலையாளிகளும் பரஸ்பரம் உதவி செய்து கொண்டார்கள் என்றும் அதெல்லாம் அதிகார திமிருடன் இருக்கும் உங்களுக்கு புரியாது என்றும் அவர் கூறியுள்ளார். கேரளாவில் திரைக்கதை எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக அவர் விமர்சனம் செய்திருப்பதாகவும் கேரளாவை பற்றி பொய்களை சொன்ன ‘தி கேரளா ஸ்டோரீஸ்’ படத்தின் தொடர்ச்சியாக ஜெயமோகனின் பதிவை நான் பார்க்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்
+ There are no comments
Add yours