இந்த ஆண்டுக்கான இந்தியன் பனோரமாவின் 54வது உலக திரைப்பட விழாவில் திரையிட காதல் என்பது பொதுவுடமை என்ற தமிழ் திரைப்படம் தேர்வாகியுள்ளது.
நவம்பர் 20 முதல் 28 ம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ள உலக திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது. இந்திய மொழிகளில் பங்குபெற்ற 408 படங்களில் இருந்து 25 படங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அந்த 25 படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காதல் என்பது பொதுவுடமை திரைப்படம் நவீன காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களின் உணர்வுகள், மன ஓட்டங்கள், சமூக சூழல் மற்றும் விஞ்ஞானம் இவற்றுக்கு நடுவே மனிதர்களுக்குள் நவீனப்பட்டிருக்கும் காதலை இத்திரைப்படம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த திரைப்படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இவர் லென்ஸ், மஸ்கிடோபிலாஷபி, தலைக்கூத்தல், ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது காதல் என்பது பொதுவுடமை படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours