சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி ‘புறநானூறு’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என கூறப்பட்டது.
கால்ஷீட் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியில் சுதா கொங்கரா உடன் ‘புறநானூறு’ படத்தில் நடிகர் சூர்யா இணைவது கேள்விக்குறியானது. இந்த நிலையில் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை புறநானூறு படத்தில் நடிக்க வைக்க சுதா கொங்கரா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் உலா வருகிறது. அதில், புறநானூறு படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் நடித்து வரும் அமரன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தையும் முடித்துவிட்டு, சுதா கொங்கராவின் ‘புறநானூறு’ படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் 2டி எஎண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில், தற்போது புதுமுக தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க உள்ளார் என்று தெரிகிறது. அவர் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
+ There are no comments
Add yours