வைதேகி காத்திருந்தாள் படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரமிளா ஜோஷாயின் மகளும் பிரபல ஹீரோயின் தான். தற்பொழுது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜயகாந்த் ,ரேவதி, கவுண்டமணி, செந்தில், பரிமளம் ,ராதாரவி ,சிவன்குமார் ,கோகிலா ,வடிவுக்கரசி ,டி. எஸ். இராகவேந்திரா ,உசிலைமணி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில் மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்திற்க்கு வைதேகி காத்திருந்தாள் படம் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது .
அதுமட்டுமில்லாமல் இந்த படம் வணிக ரீதியிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.இளையராஜா இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் அனைத்து பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது.
குறிப்பாக ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு பாடல் இன்றளவும் எவர்க்ரீன் பாடலாக நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
அதே போல் இந்த பாடலில் பெண் வெர்ஷனான ராசாவே உன்ன காணாத நெஞ்சு பாடலும் ஹிட்டானது.
இதனை தொடர்ந்து தெலுங்கில் மஞ்சி மனசுலு (1986) மற்றும் கன்னடத்தில் பிரீத்தி நீ இல்லடே நா கெகிராலி (2004) என்ற பெயர்களில் மீண்டும் தயாரிக்கப்பட்டது.
இந்த படத்தத்தில் விஜயகாந்திற்கு அத்தை மகளாக நடித்த பிரமிளா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கன்னடதிரையுலகில் பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. கன்னட திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.
இந்த நிலையில் நடிகை பிரமிளா ஜோஷாயின் மகள் நடிகை மேக்னா ராஜ் தமிழில்,யுதன் பாலாஜிக்கு ஜோடியாக காதல் சொல்லவந்தேன் படத்தில் நடித்து உள்ளார்.
இதனை தொடர்ந்துகன்னடம் தெலுங்கும், மலையாள உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை 10 ஆண்டுகால காதலித்து வந்த அவர் கடந்த 2020 ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகை மேக்னா திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் இறந்த போது மேக்னா கர்ப்பிணியாக இருந்தார்.
இதை தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரபல நடிகர் அர்ஜுனின் சகோதரி மகன் தான் சிரஞ்சீவி சார்ஜா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்,வைதேகி காத்திருந்தாள் படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரமிளா ஜோஷாயின் மகள் இவர் தான் என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறனர்.
+ There are no comments
Add yours