சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மாஜி டி.ஜி.பி., ரவீந்திரநாத்தின் மகனை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து, போதைப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. போலீசாரும் அவ்வப்போது போதைப்பொருட்களை சப்ளை செய்பவர்களை கைது செய்தும் வருகின்றனர். இருப்பினும் போதைப்பொருள் புழக்கத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில், மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னை நந்தம்பாக்கத்தில் முன்னாள் டி.ஜி.பி. ரவீந்திர நாத் மகன் அருணை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் நைஜிரியாவை சேர்ந்த ஜான் எஸி, மெக்கலன் ஆகிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவீந்திரநாத் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் டி.ஜி.பி.,யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒரு காவல் உயரதிகாரியின் மகனுக்கே தொடர்பிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours