திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே 3 வயது குழந்தையை கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினுக்குள் அடைத்து வைத்திருந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு..
“எனக்கும் எதிர்த்த வீட்டு ரம்யாவிற்கும் அடிக்கடி வாய்த் தகராறு ஏற்படும். அப்போது சமீபத்தில் ரம்யா உனக்கு இருக்கும் புத்திக்கு உனது மகனுக்கு என்ன ஆகும் பார்’ என திட்டினார்.
அவர் கூறியது போலவே எனது 23 வயது மகனும் அடுத்த சில நாட்களில் பைக் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மாந்திரீகம் மூலம் செய்வினை வைத்து என் மகனை கொன்று விட்டனர்
விபத்தில் மகனை இழந்து நான் தவிப்பதுபோல், எதிர் வீட்டு பெண்ணும் தவிக்க வேண்டும் என நான் நினைத்தேன்.
அதனால் வீட்டிற்கு முன்னால் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை தூக்கிச் சென்று டிரம்மில் உள்ள தண்ணீரில் முக்கி, கைகளையும் கால்களையும் கட்டி சாக்குப்பையில் வைத்து வாஷிங் மெஷினில் போட்டு கொலை செய்தேன்.” என கைதான தங்கம் என்ற தங்கம்மாள் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினர்,
+ There are no comments
Add yours