பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு.

Spread the love

சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியானது.

தமிழ்நாட்டில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பி.இ., பி.டெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

இந்நிலையில், நடப்பு கல்விஆண்டில் (2024-25) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவுசெய்திருந்த போதிலும், அவர்களில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 853 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, தேவையான சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். அவர்களுக்கு ஜுன் 12-ம் தேதி ரேண்டம் நம்பர் எனப்படும் சமவாய்ப்பு எண் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிறப்பு இணையதளம்: இதைத்தொடர்ந்து, ஜுன் 13முதல் 30-ம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைன் வாயிலாக சரிபார்க்கப்பட்டன.

இந்நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனர் வீரராகவ ராவ் வெளியிட்டார் .

செங்கல்பட்டு மாணவி தோஷிதா முதலிடம்; திருநெல்வேலி மாணவி நிலஞ்சனா 2ம் இடம், நாமக்கல் கோகுல் 3ம் இடமும் பிடித்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours