ICF என்னும் ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இங்கு Hindustani/ Carnatic Vocal (Female) மற்றும் Tabla ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையில் (ICF) Hindustani/ Carnatic Vocal (Female) மற்றும் Tabla ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் விதம் மொத்தமாக 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்த ICF நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் G Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த ICF நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம் General விண்ணப்பதாரர்கள் ரூ. 500/- மற்றும் SC/ST/Ex-servicemen, PWD, Women விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250/-ICF என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ICF நிறுவன பணிக்கு ஆன்லைன்’ விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான இணையதள முகவரி https://pb.icf.gov.in ஆகும்.
இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 21.05.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
+ There are no comments
Add yours