துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 90 பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (குரூப் 1 பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறை இன்றுடன் (27-04-2024) முடிவடைகிறது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த குரூப் 1 தேர்வுகளை எழுத குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்; அதிகபட்ச வயது 34 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மட்டும் 39 வயது வரை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
கல்வித் தகுதி: தேர்வர்கள் இந்தியாவில் உள்ள மத்திய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது நாடாளுமன்ற சட்டத்தால் நிறுவப்பட்ட பிற கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழக மானியக் குழு சட்டம்-1956, பிரிவு 3-இன் கீழ் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட பிற கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
இப்பதவிக்கு முதல்நிலை தேர்வு (Prelims Examination) , முதன்மை தேர்வு (Main Examination) மற்றும் நேர்காணல் தேர்வு (Interview Examination) ஆகிய மூன்று நிலைகளில் நடைபெறும்.
தேர்வர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் (OTR) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும்.
தேர்வர்கள் ஏற்கனவே ஒருமுறைப்பதிவில் பதிவு செய்திருப்பின், அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யத் தொடங்கலாம்.
+ There are no comments
Add yours