டெக் மஹிந்திரா நிறுவனம் ஓராண்டில் 6,000 இளைஞர்களை புதிதாக பணி நியமனம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரிய தொழில்நுட்ப சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா, கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் அதனுடைய நிகர லாபத்தில் 40.9 சதவீதம் குறைந்ததாக தெரிவித்துள்ளது.
முந்தைய காலாண்டில் அதன் நிகர லாப மதிப்பு ரூ.13,718 கோடியாக இருந்தது எனவும் ஆனால் தற்போது ரூ.661 கோடியாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அமைந்துள்ள டெக் மஹிந்திரா நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை கடந்த காலாண்டில் இருந்து 795 பேர் குறைந்துள்ளது.
இந்நிலையில் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டு முதல் லாபத்தை பெறும் நோக்கில் 6,000 இளைஞர்களை புதிதாக பணி நியமனம் செய்யவுள்ளதாக டெக் மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளது.
இந்த எண்ணிக்கை நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காலாண்டிற்கும் 1500 பேர் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours