கனடாவின் மேற்கு பிரிட்டீஷ் கொலம்பியா பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு கெலோவ்னா நகரைச் சுற்றியுள்ள பகுதியில் காட்டுத் தீ அதிக அளவில் பரவி வருவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 64 ஹெக்டேரில் பரவியிருந்த காட்டுத்தீயானது 6 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள 4 ஆயிரத்து 800 க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தற்போது வரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
கனடா இந்த ஆண்டு மிக மோசமான காட்டுத்தீயை எதிர்கொண்டு வருகிறது.
பருவநிலை மாற்றம், வறட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவை காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞனிகள் தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours