டெல்லி சட்டப் பேரவையில் 7 பாஜக எம்எல்ஏ–க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
டெல்லி சட்டப் பேரவையில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆம் ஆத்மி அரசின் சாதனைகள்குறித்து துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உரையாற்றினார். அப்போது, பாஜக எம்எல்ஏ–க்கள் அமளியில்ஈடுபட்டு ஆளுநருக்கு இடையூறு ஏற்படுத்தினர். அதைத் தொடர்ந்து, இடையூறு விளைவித்த பாஜக எம்எல்ஏக்களைஇடைநீக்கம் செய்ய, ஆம் ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டே தீர்மானம் கொண்டுவந்தார்.
அதன்பேரில், பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல், பாஜக எம்எல்ஏக்கள் மோகன் சிங் பிஷ்ட், அஜய் மகாவர், ஓ.பி.சர்மா, அபய் வர்மா, அனில் பாஜ்பாய், ஜிதேந்தர் மகாஜன், விஜேந்தர் குப்தா ஆகிய 7 பேரை இடைநீக்கம்செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தங்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, நடவடிக்கைக்கு உள்ளான எம்எல்ஏ–க்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ–க்கள்
இந்த வழக்கை நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் விசாரித்தார். அப்போது, தங்கள் இடைநீக்க உத்தரவானதுஅரசியலமைப்புக்கு முரணா என்றும், தங்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், இடைநீக்க எம்எல்ஏக்கள்வாதிட்டனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 27ம் தேதியன்று, வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.
இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதூரியைத் தவிர அனைத்து பாஜக எம்எல்ஏ–க்களும்பேரவையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மேலும், பட்ஜெட்டை இறுதி செய்வதில் தாமதம்ஏற்பட்டதால் அந்த கூட்டத்தொடர், மார்ச் முதல் வாரம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் எம்எல்ஏ–க்கள்இடைநீக்க வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், பாஜக எம்எல்ஏக்கள் 7 பேர்இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்தது.
+ There are no comments
Add yours